செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" என கூறி மவுனம் கலைத்துள்ளார்.

* தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

* மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டார்.

* அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

* அரசு முறை பயணமாக புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

* அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன், தமிழகத்தில் தொழில் தொடங்கப்படுவது பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

* 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

* பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

* பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்..


Next Story