நகராட்சி பூங்கா மீண்டும் செயல்பட கோரிக்கை
நகராட்சி பூங்கா மீண்டும் செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
கொரோனா காலத்தில் மக்கள் கூடுவதை தடுக்க பூங்காக்களை மூட அரசு உத்தரவிட்டது. அதனையொட்டி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சியின் நவீன பூங்காவும் மூடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும்கொரோனா கால கட்டுப்பாடுகளை அரசு நீக்கிவிட்டது. இதனால் பல்வேறு இடங்களில் பூங்காவிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் காரைக்குடியில் சாதாரண மக்களுக்கு நகராட்சி பூங்கா ஒன்று தான் விடுமுறை நாட்களிலும் மாலை நேரங்களிலும் பொழுதுபோக்கு இடம். எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை மீண்டும் சுத்தம் செய்து தக்க சுகாதார வசதிகளோடு பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் நகராட்சி தலைவர் முத்துத் துரையிடம் கோரிக்கை விடுத்தனர். நகராட்சி தலைவர் ஆவண செய்வதாக உறுதியளித்தார்