விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு: திருமணமான 6 நாளில் பரிதாபம்


விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு: திருமணமான 6 நாளில் பரிதாபம்
x

விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு: திருமணமான 6 நாளில் பரிதாபம்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சந்தியா (வயது 20). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (35) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடந்தது. கடந்த 12-ந்தேதி சந்தியா தனது கணவர் முருகனுடன் செவரப்பூண்டிக்கு விருந்துக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நடைபெறுவதாக இருந்த விருந்துக்கு முருகனின் தாய், தந்தை ஆகியோரும் வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை சந்தியா வீட்டில் குளித்துவிட்டு உடைமாற்றி கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

திருமணமான 6 நாளில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story