செண்பகவல்லி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு


செண்பகவல்லி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் புத்தாண்டு தின விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 5.30 மணிக்கு செண்பகவல்லி அம்மன்- பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், 7.30 மணிக்கு விளா பூஜையும், மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் வழங்கினார்கள்.

இதபோன்று வீரவாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவில் மற்றும் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story