புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் குவியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்


புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் குவியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
x

மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2023-ம் ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். புத்தாண்டை கொண்டாட குடும்பம், குடும்பமாக மக்கள் திரண்டு வருகின்றனர். மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட குவிந்த இளைஞர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இரவு 8 மணிக்கு மேல் மணற்பரப்பில் இறங்க அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story