ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்மாற்றி


ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்மாற்றி
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடிக்கடி மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் லைப்ரரி தெரு, கந்தாடை தெரு, பெரிய கடை பஜார், ஆண்டாள் கோவில், மாடவீதி ஆகிய பகுதிகளுக்கு இப்பகுதியில் உள்ள மின்மாற்றி மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இ்்ந்தநிைலயில் அடிக்கடி மின் தடை மற்றும் மின்சாரம் பழுது ஏற்பட்டு வந்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 250 கிலோ வாட் மின்மாற்றியை மாற்றி தருமாறு மின்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் வெளியானது. அதன் எதிரொலியாக விருதுநகர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர் பெருமாள், உதவி பொறியாளர் கல்யாணி பாண்டியன் ஆகியோர் இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டனர்.

புதிய மின்மாற்றி

அதாவது அப்பகுதியில் இருந்த 250 கிலோ வாட் மின் மாற்றியை மாற்றி அதற்கு பதிலாக 500 கிலோ வாட் மின்மாற்றியை வைத்து மின் இணைப்பு கொடுத்தனர். இதனை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மின் தடை, மின்சார பழுது ஆகிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story