ரூ.9½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


ரூ.9½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x

குன்னத்தூரில் ரூ.9½ லட்சத்தில் புதிய ரேஷன் கடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை மேற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9½ லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள காளியம்மன் கோவில் தெருவில் புதியதாக ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டியும் கோரிக்கை வைத்தனர். இதை நிறைவேற்றி கொடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story