ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
இடையந்தாங்கல் கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
புதிய ரேஷன் கடை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த வாங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையந்தாங்கல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சாரதி, நவீன்குமார், சின்ன பொண்ணு, அழகயரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத்தும், குடும்ப அட்டைதார்களுக்கு அரிசி, பருப்பு, சக்கரை தொகுப்பை வழங்கினார்.
பாராட்டு
பொதுமக்களின் 30 ஆண்டு கனவை நிறைவேற்றி தந்த ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரிய சாமியை எம்.எல்.ஏ. பாராட்டினர். மேலும் ரேஷன் கடை கட்ட நிலத்தை தானமாக வழங்கிய சந்திரன் மற்றும் நாராயணகுப்பம் பகுதிக்கு மயானம் அமைப்பதற்கு நிலம் வழங்கிய சம்பத் மகன்கள் மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரை பாராட்டினார்.
மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மதிவாணன், ஒன்றிய ஐ.டி. விங் சேது, கரடிகுப்பம் துணைத்தலைவர் கனகராஜ், கொளத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, கோவிந்தசேரி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், சமூக சேவகர்கள் ஏழுமலை, தீபன், ரமேஷ் பாண்டியன், குமரேசன், சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.