புதிய ரேஷன் கடை


புதிய ரேஷன் கடை
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM (Updated: 6 Jun 2023 6:45 PM)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே புதிய ரேஷன் கடையை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஓ. எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.கூட்டுறவு சங்க சார்பதிவாளர் மாரியப்பன், தலைஞாயிறு கூட்டுறவு சங்கத் தலைவர் அவை. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் கூட்டுறவு சங்க தலைவர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.


Next Story