புதிய ஊராட்சி செயலக கட்டிடம்
ஆணைக்காரன் சத்திரத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம்
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் வட்டாரம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் 2022-2023 -ம் ஆண்டிற்கு புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வரப்பெற்றுள்ளது. எனவே சேதமான நிலையில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அதே வளாகத்தில் அமைந்துள்ள வணிக வளாகம், இருப்பறையுடன் கூடிய அங்காடி கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய ஊராட்சி செயலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து பழைய கட்டிடத்தில் உள்ள பொருட்களை இரண்டு தினங்களில் ஊராட்சி மன்ற தலை வர் அப்புறப்படுத்த வேண்டும் என்று கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story