ரூ.36 லட்சத்தில் புதிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உபகரணங்கள்


ரூ.36 லட்சத்தில் புதிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உபகரணங்கள்
x

ரூ.36 லட்சத்தில் புதிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு தேவையான அதி நவீன உபகரணங்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு தேவையான அதிநவீன உபகரணங்களான சி-ஆர்ம், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கான பீஷ் கருவி, மயக்க மருந்து கொடுக்க தேவையான அனாஷ்திஷியா ஒர்க், ஸ்டேசன், அறுவை அரங்கிற்கு தேவையான ஆப்ரேஷன் டேபிள், வெர்டிக்கல் ஆட்டோகிளேவ், அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் பிராண வாயு அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் மல்டிபாரா மானிட்டர் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது தலைமை மருத்துவர் சுதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story