கல்வியை ஒழிக்கவே புதிய கல்விக்கொள்கை - சபாநாயகர் அப்பாவு
7 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது ஆனால் இந்தியாவில் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
உலக சாதனை படைத்த கல்லூரிகளை குழி தோண்டி புதைத்துவிட்டு, வேதங்களை சொல்லிக் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தகளை புகுத்த முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
கல்வியை ஒழிக்கவே புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 7 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இல்லை. தமிழகத்தை குறிவைத்து மத்திய அரசு மக்கள் விரோதப்போக்குடன் செயல்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story