புதிய சமுதாயக்கூடம்-அங்காடி கட்டிடங்கள்
நாகை நகராட்சி பகுதியில் புதிய சமுதாயக்கூடம்-அங்காடி கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் மற்றும் அங்காடி கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகையில் 26-வது வார்டில் தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் கடை திறப்பதாக கூறப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக பாரதி மார்க்கெட்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்காடி கட்டிடம், பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூட கட்டிடம், பால்பண்ணைச்சேரியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்காடி கட்டிடம் ஆகிய கட்டிடங்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நத்தர், திலகர், பிரதீப் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.