ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
x

திருவாரூர் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவாரூர்

திருவாரூர் மாங்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழ தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குருநாதன் வரவேற்றார். பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. புதிய வகுப்பறை கட்டிடம், கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரவீந்திரன், பள்ளி தலைமையாசிரியர் கமலாதேவி, ஊராட்சி செயலர் இளங்கோவன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story