ரூ.10 லட்சத்தில் புதிய பாலம்; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
நெல்லை டவுனில் ரூ.10 லட்சத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் இருந்து டவுன் ரெயில் நிலையத்துக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே உள்ள பாலம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு நெல்லை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கு புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர்கள் பிரபா சங்கரி, நித்திய பாலையா, சுந்தர், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் காசிமுருகன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பைஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story