அரவக்குறிச்சியில் புதிய கலை-அறிவியல் கல்லூரி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


அரவக்குறிச்சியில் புதிய கலை-அறிவியல் கல்லூரி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x

அரவக்குறிச்சியில் புதிய கலை-அறிவியல் கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கரூர்

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி அரவக்குறிச்சி சமுதாயகூடத்தில் (தற்காலிகம்) புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்துள்ளார். இந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

50 இடங்கள் ஒதுக்கீடு

ஒவ்வொரு பாட பிரிவுக்கும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும், தேர்வு நெறியாளருமான முனைவர் சுதா கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார், என்றார். இதில், பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் என்.மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் பசீர் அகமது, அரவக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் தங்கராஜ், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story