நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மகாசபாவினர் மனு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மகாசபாவினர் மனு
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மகாசபாவினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

அகில பாரத இந்து மகா சபா நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், 'நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாமலும், முறையான செவிலியர் பராமரிப்பு இல்லாமலும் மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் சுத்தமான குடிநீர் வசதி, படுக்கை வசதி மற்றும் மின்விசிறி வசதி செய்து கொடுக்க வேண்டும். உள் நோயாளி வார்டுகளில் செவிலியர்கள் உரிய முறையில் பணி செய்வதை கண்காணிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது. அப்போது மாவட்ட துணைத் தலைவர்கள் கலைச்செல்வன், சிவராமகிருஷ்ணன், மாநகர தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராஜா, நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story