நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது...!


நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது...!
x

நெல்லை-சென்னை இடையே நாளை மறுநாள் முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

நெல்லை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, நெல்லை-சென்னை இடையே நாளை மறுநாள் (வரும் 24-ந்தேதி) முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நெல்லை-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், வந்தே பாரத் ரெயில் நேற்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்றது. காலை 7.30 மணிக்கு விழுப்புரத்திற்கு சென்றடைந்த நிலையில் அங்கு 2 நிமிடம் பயணிகளின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடைந்தது.

தினமும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்பதால் இன்று காலை 6 மணிக்கு ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த ரெயிலில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் பயணிக்கின்றனர்.


Next Story