'நீட்' விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்


நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
x

மாணவர்களின் தற்கொலையால் தொடரும் துயரம்: ‘நீட்' விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்ட 2017-ம் ஆண்டில் அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப் போக்கி கொண்ட நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி தராமல் அலட்சியப்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். மருத்துவ படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து படித்து வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story