உள்துறை நடவடிக்கைக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டு உள்ளது - ஜனாதிபதி முர்மு தகவல்


உள்துறை நடவடிக்கைக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டு உள்ளது - ஜனாதிபதி முர்மு தகவல்
x

உள்துறை நடவடிக்கைக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டு உள்ளது என்று ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.

மதுரை


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கவர்னர் அந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி முர்முக்கு, மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் நீட் மசோதா, உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது, என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டு உள்ளார்.


Next Story