விளாத்திகுளம் அருகேபுதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
விளாத்திகுளம் அருகே புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி அண்ணா நகர் காலனி தெருவில் யூனியன் பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை விளாத்திகுளம் யூனியன் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள் ராஜேந்திரன் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவின் ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதை யூனியன் தலைவர் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story