வடபொன்பரப்பி அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
வடபொன்பரப்பி அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
வடபொன்பரப்பி,
வடபொன்பரப்பி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த்(வயது 37) அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இவருடைய அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் வைத்திருந்த கத்தியால், ஆனந்தை குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.