உப்புக்கோட்டை அருகேகிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


உப்புக்கோட்டை அருகேகிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தேனி

உப்புக்கோட்டை அருகே டொம்புச்சேரியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தால் சான்றிதழ் வழங்குவதற்கு தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று டொம்புச்சேரி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போடி வட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி சாலையின் குறுக்கே மோட்டார்சைக்கிளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தால் சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் அவர் சரிவர பதில் கூறுவதில்லை என்றனர். இதையடுத்து அதிகாரிகளிடம் பேசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story