தியாகதுருகம் அருகே உழவன் செயலி குறித்த பயிற்சி முகாம்


தியாகதுருகம் அருகே  உழவன் செயலி குறித்த பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே உழவன் செயலி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் வனிதா, துணை வேளாண்மை அலுவலர் மொட்டையப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வரவேற்றார். இதில் உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், இடுபொருட்கள் முன்னுரிமை பதிவு, விதை-உரம் இருப்பு விவரம், வேளாண் பொறியியல் துறையில் வாடகைக்கு இயந்திரங்கள் அளித்தல், உழவன் செயலி, மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வராஜ், இளையராஜா, உதவி தோட்டக்கலை அலுவலர் ரஞ்சிதா, அட்மா திட்ட பணியாளர்கள் ரவி, சிவப்பிரகாசம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story