காவல்கிணறு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
காவல்கிணறு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
நாகர்கோவில்,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று 30 வயதுடைய வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தாா். இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அந்த வாலிபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபரின் நெஞ்சில் காதலின் அடையாள சின்னமும், கையில் ஸ்டில் ஆல்வி என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.