தட்டார்மடம் அருகே அங்கன்வாடி மைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
தட்டார்மடம் அருகே அங்கன்வாடி மைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே, அங்கன்வாடி மைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அங்கன்வாடி மைய ஊழியர்
தட்டார்மடம் அருகே உள்ள புத்தன் தருவை பெருமாள் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 38). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் செல்லத்துரை கோவையில் தங்கி பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது மகளுடன் கலைச்செல்வி வீட்டில் தங்கியிருந்து அங்கன்வாடி மையத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
பாலியல் தொல்லை
இந்தநிலையில் புத்தன்தருவை கஸ்பா தெருவை சேர்ந்த கார் டிரைவரான விஜயகுமார் (40) என்பவர் வேலைக்கு ெசல்லும் வழியில் அடிக்கடி வழிமறித்தும், வீட்டுக்கு சென்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் கலைச்செல்வி ெசல்போன் எண்ணை தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
கார் டிரைவர் கைது
நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு விஜயகுமார் ெசன்றுள்ளார். அங்கிருந்த மகளிடம் கலைச்செல்வின் செல்போன் எண்ணைகேட்டுள்ளார். தரமறுத்த அவரிடமும் தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார்