கம்பம் அருகேகேசவபுரம் கண்மாய் தூர்வாரப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்பம் அருகேகேசவபுரம் கண்மாய் தூர்வாரப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே கேசவபுரம் கண்மாய் தூர்வாரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

தேனி

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் கேசவபுரம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாய் மூலம் 104 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கூத்தநாச்சி ஓடை மூலம் கேசவபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் புளி, இலவம், மாமரங்களை சிலர் வளர்த்து வருகின்றனர். மேலும் குளத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் மண்மேவி காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. தற்போது கண்மாய் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் கேசவபுரம் கண்மாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story