ஓட்டப்பிடாரம் அருகே ரூ.13.83 கோடியில் அணைக்கட்டு, பாலங்கள் கட்டுமான பணி தொடக்கம்


ஓட்டப்பிடாரம் அருகே ரூ.13.83 கோடியில் அணைக்கட்டு, பாலங்கள் கட்டுமான பணி தொடக்கம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.13.83 கோடியில் அணைக்கட்டு, பாலங்கள் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

கடம்பூர், கயத்தாறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் கொம்பாடி கால்வாய் மற்றும் ஆரைக்குளம் அணைக்கட்டு வழியாக ஒருபுறம் ஓட்டப்பிடாரம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களுக்கும், மற்றொரு புறம் கோரம்பள்ளம் அணைக்கு செல்கிறது. இந்த அணை நிரம்பி கடலுக்கு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே, காற்றாற்று ஓடையில் மலைபட்டி பகுதியில் அணைகட்டு கட்டுவதுடன், அதிலிருந்து வரத்து கால்வாய் அமைத்து ஆரைக்குளம் அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என ஓட்டப்பிடாரம் பகுதி விவசாயிகள் 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஏற்று இத்திட்டங்களை நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.13.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், மலைபட்டி பகுதில் அணையும், காற்றாற்று ஓடை மீது இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான தொடக்க விழா தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடந்தது. எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தாசில்தார் சுரேஷ், கோரம்பள்ளம் ஆறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் ஆறுமுகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு, ஆரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ.வை கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


Next Story