நெல்லிக்குப்பம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
நெல்லிக்குப்பம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் தவறி விழுந்த வீடியா வைரலாகிறது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே லாரி வந்ததால், பஸ் டிரைவர் திடீரென 'பிரேக்' போட்டுள்ளார். இதில் பயணம் செய்த ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் பின்பக்க படிக்கட்டு வழியாக அலறியடித்துக்கொண்டு சாலையில் விழுந்தார். இதற்கிடையே டிரைவர், பஸ்சை இயக்கினார். அப்போது சாலையோரம் இருந்தவர்கள் சத்தம் போடவே, டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதில் குழந்தை மற்றும் தாய் லேசான காயத்துடன் உயிா் தப்பினர். இதையடுத்து அந்த பெண்ணின் கணவரை அக்கம்பக்கத்தினர் வரவழைத்து அவருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story