நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா


நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள கடையனோடை சேகரம் தங்கையாபுரம் தூய பேதுருவின் ஆலய 109-வது பிரதிஷ்டை விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் 3 நாட்கள் மாலையில் ஊரைச் சுற்றி ஜெப பவனியும், பின்னர் ஸ்தோத்திர ஆராதனையும், அதனை தொடர்ந்து கன்வென்ஷன் கூட்டங்களும் நடந்தது. நாசரேத் காபிரியேல் நற்செய்தி குழுவினர் பாடல்கள் பாடினர். சென்னை இயேசுவே ஆதாரம் ஊழியங்களின் நிறுவனர் டேனியல் தேவ செய்தி வழங்கினார். 4-வது நாள் மாலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. ஸ்பிக் நகர் சேகர குரு ரூபன் தனசிங் அருட்செய்தி வழங்கினார். அன்று இரவு 109-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. சீயோன் நகர் சேகரகுரு ரவி சிறப்பு செய்தி வழங்கினார். 5-வது நாள் மதியம் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சேகர குரு ஆசீர் சாமுவேல், சபை ஊழியர் செல்வின் ஞானக்கண், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்லப்பா மற்றும் தங்கையாபுரம் சபையார், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story