நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்


நம்பியூர் அருகே  குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்;  அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்
x

நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரியூரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக ஆழ்குழாய் பழுதடைந்ததை அடுத்து குடிநீர் வினியோகிப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் பூசாரியூரை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம்-பெருந்துறை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவடிவேல், நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றார்கள்.

3 நாட்களுக்குள் ஆழ்குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி வினியோகிக்க ஏற்பாடு செய்கிறோம். மேலும் வருகிற 15-ந் தேதிக்குள் புதிய ஆழ்குழாயும் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்கள். அதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.


Next Story