மெஞ்ஞானபுரம் அருகேஅரசு பஸ் டிரைவரை தாக்கிய 4 பேருக்கு அபராதம்


தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய 4 பேருக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

நெல்லை மாவட்டம் சிக்கத்தான்குறிச்சியை சேர்ந்த மலையாண்டி மகன் இசக்கி பாண்டி (வயது 37). பஸ் டிரைவர். இவர் கடந்த 31-ந்தேதி நெல்லையில் இருந்து உடன்குடிக்கு நாசரேத் பிள்ளைவிளை வழியாக அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பிள்ளை விளையை கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று அரசு பஸ் மீது உரசி நின்றது.

அந்த காரிலிருந்த கோவில்பட்டியை சேர்ந்த ரங்கநாதர் கோபால் மகன் வசுந்தரன் (43), பரமசிவன் மகன் மாரி கண்ணன் (33), கணேசன் மகன் உமைய ராஜா (38), ராமசுப்பு மகன் மாரி செல்வம் ( 30) ஆகியோர் கீழே இறங்கி வந்து பஸ் டிரைவரான இசக்கி பாண்டியை கீழே இழுத்து போட்டு, சரமாரியாக அடித்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, குற்றம் சாட்டப்பட்ட வசுந்தரன் உள்பட 4பேருக்கும் தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜ்மோகன் ஆஜரானார்.


Next Story