கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை 300 வாழைகள் முறிந்து சேதம்


கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை 300 வாழைகள் முறிந்து சேதம்
x

கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் 300 வாழைகள் முறிந்து சேதமானது

ஈரோடு

கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 300 வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

சூறாவளிக்காற்றுடன் மழை

கோபி அருகே உள்ள பொலவகாளிபாளையம், நாதிபாளையம், கல்லுக்குழி, தோட்டக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டு உள்ளனர். வாழைகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

300 வாழைகள்

இதன்காரணமாக கோபி பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

இதுகுறித்து கோபி பகுதிைய சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வாழை சாகுபடி செய்து உள்ளோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் சூறாவளிக்காற்றால் வாழைகள் முறிந்துவிட்டன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முறிந்து விழுந்து சேதமான வாழைகளுக்குண்டான இழப்பீட்டு தொகையை உரிய விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story