கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர்.
டி.என்.பாளையம்
கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர்.
மயங்கிய நிலையில்...
கே.என்.பாளையம்-கடம்பூர் சாலையில் உள்ள பெரியசாமி கோவில் அருகே பாறையின் மீது நேற்று ஒரு ஆணும், பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
கணவன்-மனைவி
சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இந்திராணி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக பிரபுவும், இந்திராணியும் மனமுடைந்து காணப்பட்டனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து கே.என்.பாளையம்-கடம்பூர் ரோட்டில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள பாறையில் அமர்ந்து விஷத்தை குடித்து தற்கொலை முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.