காயல்பட்டினம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதல்; 2 வாலிபர்கள் பலி
காயல்பட்டினம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அருகே போட்டி போட்டு கொண்டு வேகமாக ஓட்டியதால் மோதியதில், மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
தசரா நிகழ்ச்சிக்கு...
சாத்தான்குளம் நாசரேத் ரோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மகன் ஹரிஹரன் (வயது 21). இவரது நண்பர் தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாளையை சேர்ந்த ராஜா மகன் ராகவன்(17).
இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று மாலையில் இருவரும் காயல்பட்டினம் தைக்காபுரத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற தசரா நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு, இரவு 11 மணி அளவில் இருவரும் மொபட்டில் திருச்செந்தூரை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஹரிஹரன் மொபட்டை ஓட்டியுள்ளார்.
விபத்து
காயல்பட்டினம் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்களில் வந்த மர்மநபர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இதை அறிந்த ஹரிஹரன் மொபட்டை வேகமாக செலுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டியவரும் போட்டிபோட்டு கொண்டு வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
காயல்பட்டினம் ஓடக்கரை தாண்டி சென்ற போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது ஆறுமுகநேரி எஸ்.ஆர். எஸ். கார்டன் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சாந்தகுருஸ் மகன் ஜான்சன் என்பவர் குடும்பத்துடன் திருச்செந்தூரில் திரைப்படம் பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரை சாலை ஓரமாக திருப்பி உள்ளார். இந்த நிலையில், மொபட்டுடன் தூக்கி வீசப்பட்ட ராகவனும், ஹரிகரனும் எதிரே வந்த ஜான்சன் கார் முன்பு விழுந்துள்ளனர். இதை பார்த்த ஜான்சன் காரை நிறுத்தியுள்ளார். அவர்கள் மீது மோதிய மோட்டார் ைசக்கிளில ்வந்த மர்ம நபர் நிறுத்தாமல் தப்பி சென்று விட்டார்.
2 வாலிபர்கள் சாவு
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 2பேரைுயம் ஜான்சனும், அக்கம் பக்கத்தினரும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அந்த 2 பேரும் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் விபத்தை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.