கடமலைக்குண்டு அருகேவாகனம் மோதி மான் சாவு
கடமலைக்குண்டு அருகே வாகனம் மோதி மான் இறந்தது.
தேனி
கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மலைப்பகுதியில் இருந்து மான்கள் மீண்டும் குடிநீர் தேடி தோட்டப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை சாலையில் மான் ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றி கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தண்ணீர் தேடி வந்தபோது வாகனம் மோதி மான் இறந்ததாகவும், அந்த மான் சுமார் 3 வயது உடையது என்றனர்.
Related Tags :
Next Story