கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்


கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான பளியன்குடியிருப்பு பகுதியில் 54 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று பளியன்குடியிருப்பு பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு கட்டணம் இல்லா ஓட்டுனர் உரிமம் மற்றும் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

உத்தமபாளையம் வாகன போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் கலந்து கொண்டு பழங்குடியின மக்கள் 28 பேருக்கு ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார். இவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி மையம் மூலம் இலவசமாக பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாகனம் மூலம் சாலை விபத்து ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடலூர் வனச்சரகர் முரளிதரன், வனவர் திருமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story