கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி


கூடலூர் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி தொய்வு:  வாகன ஓட்டிகள் அவதி
x

கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது

தேனி

கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூர் வடக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடலூர் கருணாநிதி காலனி அருகே மழைநீர் செல்ல பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story