கூடலூர் அருகே வாலிபர்களுக்கு மினி மாரத்தான் போட்டி
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் வாலிபர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடந்தது
தேனி
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் இந்திய ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் வாலிபர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தொடங்கி வைத்தார். அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் தொடங்கி சுருளி அருவி சாலையில் உள்ள அரண்மணைப்பாலம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த பிரனேஷ் முதலிடத்தையும், தேனி குருபிரசாத் 2-வது இடத்தையும், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கருணேஷ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story