சின்னமனூர் அருகேஆற்றில் மூழ்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி


சின்னமனூர் அருகேஆற்றில் மூழ்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே ஆற்றில் மூழ்கி பிரியாணி கடை உரிமையாளர் பலியானார்.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள தேவாரத்தை சேர்ந்தவர் சுருளி மஸ்தான் (வயது 55). தேவாரத்தில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று இவர், சின்னமனூரில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அவர் தனது நண்பர்களான கோபி, பால்பாண்டி ஆகியோருடன் சேர்ந்து சின்னமனூர் அருகே உள்ள எல்லப்பட்டியில் முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளிக்க சென்றார். 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சுருளி மஸ்தான் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story