போடி அருகே குடும்ப தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து


போடி அருகே  குடும்ப தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து
x

போடி அருேக குடும்ப தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது

தேனி

போடி அருகே உள்ள அம்மாபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 38). இவரது மனைவி பிரதீபா. இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக்கொண்டு பிரதீபா, குழந்தையுடன் தேவாரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் அவர் தனது சித்தப்பா முத்தையா வீட்டிற்கு வந்தார்.

இதை அறிந்த ரஞ்சித் தனது குழந்தையை பார்க்க அங்கு சென்றார். அப்போது முத்தையா, அவரது உறவினர் கண்ணன் ஆகியோர் ரஞ்சித்தை வீட்டிற்குள் செல்ல ்விடாமல் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்தையா, கண்ணன் ஆகியோர் வயிற்றில் குத்தினார்.

இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரஞ்சித், முத்தையா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story