இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் நூதன போராட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்
திருச்சி
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருச்சி மேற்கு பகுதி சார்பில் உறையூர் குறத்தெரு சந்திப்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மேற்குப்பகுதி தலைவர் ஆயிஷா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் லலிதா ஜான்ஸி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பார்வதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பாடை கட்டி கியாஸ் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து, இறுதி ஊர்வலம் போல அதை தூக்கி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story