நவராத்திரி விழா
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள பிரம்ம வித்யாம்பிகையை வழிபட்டால் புத்தி கூர்மை, அறிவாற்றல் கிடைப்பதாக புராண வரலாறு கூறுகிறது. படைத்தல் தொழிலை இழந்த பிரம்மா, இவருடைய சன்னதி அருகே இவரை நோக்கி தவம் இருந்து மீண்டும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பிரம்ம வித்யாம்பிகைக்கு நவராத்திரி விழா தொடங்கியது. முன்னதாக பிரம்ம வித்யாம்பிகை கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார், அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story