இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்


இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்
x

நீடாமங்கலம் பேரூராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் மாசு படாத வகையில் திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கினாா். பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ராமராஜ் பேசினாா். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காந்திகார்த்திக், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ராஜன்ரமேஷ், சக்திவேல், திருச்சி அன்பில் தர்மலிங்கம் மற்றும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள், இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையாளர் அசோகன் நன்றி கூறினார்.


Next Story