தேசிய வாக்காளர் தினம்; விலைமதிப்பில்லா வாக்கினை நேர்மையுடன் செலுத்த உறுதியேற்போம் - டி.டி.வி. தினகரன்
ஜாதி, மதம் மற்றும் பணத்திற்கு அடிபணியாமல் ஜனநாயக கடமையாற்ற உறுதியேற்போம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாட்டில் உள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தில், விலைமதிப்பில்லா வாக்கினை நேர்மையுடன் செலுத்த உறுதியேற்போம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்காகவோ அடிபணியாமல் விலை மதிப்பில்லா வாக்கினை நேர்மையுடன் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.