தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்
தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்
மத்திய இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி மன்னார்குடி வட்டார அளவிலான மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற தேசிய ஒற்றுமை தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு திருவாரூர் மாவட்ட என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் என்.ராஜப்பா தலைமை தாங்கினார். முன்னதாக தேசிய மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் கமலப்பன் வரவேற்றார். இதில் தூயவளனார் பள்ளி திட்ட அலுவலர் மேரிசெல்வராணி கலந்துகொண்டு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி வாசிக்க, மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஜேஸீஸ் மண்டலத் தலைவர் பாலகுமாரன் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், ஜேஸீஸ் மன்னார்குடி கிளை தலைவர் அமுதன், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து தொடங்கி மேலராஜவீதி, காந்தி ரோடு வழியாக சென்று தேசிய மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பின்லே பள்ளி, தேசியபள்ளி, தூய வளனார் பள்ளி, அரசு மாதிரி மகளிர் பள்ளி, சண்முகா மெட்ரிக் பள்ளி, பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி, சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 300 என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி சென்றனர். முடிவில் திட்ட அலுவலர் தீபா நன்றி கூறினார்.