தேசிய தபால் வார விழா


தேசிய தபால் வார விழா
x
தினத்தந்தி 12 Oct 2023 2:15 AM IST (Updated: 12 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தேசிய தபால் வார விழா நடைபெற்றது.

நீலகிரி

உலகளாவிய தபால் ஒன்றியம் நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை தேசிய தபால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தபால் பிரிப்பகத்தில் தேசிய தபால் வார விழா நடந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தபால் பிரிப்பக தலைமை உதவி கட்டு பிரிப்பாளர் பரிமளா தேவி தலைமை தாங்கி தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, வைப்பு தொகை, பதிவு தபால், விரைவு தபால் குறித்தும், விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் அலுவலக பணியாளர்கள் கோகிலா, ரவி, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story