"மாநில மொழிகளுக்கு தேசிய மொழி அங்கீகாரம்" - புதிய கல்வி கொள்கை குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து


மாநில மொழிகளுக்கு தேசிய மொழி அங்கீகாரம் - புதிய கல்வி கொள்கை குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து
x

அடுத்த ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிக்கல் பைபர் சேவையை பெரும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிக்கல் பைபர் சேவையை பெரும் என்றும் கூறினார்.

இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய அவர், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழியாக புதிய கல்வி கொள்கை அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.


Next Story