தேசிய அளவிலான கராத்தே போட்டி: கரூரை சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பரிசு
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கரூரை சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பரிசு வென்றனர்.
கரூர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் எல்.என்.சி.பி.இ. ஸ்டேடியத்தில் கடந்த 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி தேசிய அளவிலான கியோகுஷின் கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 385 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணியில் கரூரை சேர்ந்த மாணவர்கள் டி.எஸ்.சஞ்சீவ், ஏ.சபரி கிரிசன் ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். ஏ.துருவ சித்தன் 2-ம் பரிசையும், எஸ்வந்த், ஜி.நாகரத்தினம் ஆகியோர் 3-ம் பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை சென்சாய் சி.சாமுவேல், பயிற்சியாளர் சென்சாய் எம்.தமிழ்செல்வன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story