அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை


அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை
x

திருவண்ணாமலை கோட்டத்தில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை ெசய்யப்படுகிறது

திருவண்ணாமலை

இந்திய நாடு வருகிற 15-ந் தேதியன்று 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அந்த வகையில் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து கிளை, துணை தலைமை உள்ளிட்ட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனைக்காக உள்ளது

. இதன் விலை ரூ.25 ஆகும். இதனை கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மொத்தமாக வாங்கி பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

மேலும் திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் சார்பாக விற்கப்பட்ட முதல் தேசிய கொடியினை மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்று கொண்டார்.

இதேபோல் கீழ்பென்னாத்தூரில் உள்ள தபால் நிலையத்தில் இன்று முதல் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


Related Tags :
Next Story